Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்.. போலி விளம்பரங்கள் வழக்கில் அதிரடி..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 2, 2025
in Default
1
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்.. போலி விளம்பரங்கள் வழக்கில் அதிரடி..
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மேஜிக் மருந்துகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம், 1954 இன் விதிகளை மீறியதாக அவர்கள் மீதான வழக்கு நடந்து வந்தது.

அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டு, நோய்களைக் குணப்படுத்தும் ஆதாரமற்ற கருத்துகளை திவ்யா பார்மசி வெளியிட்டதாக கேரளா முழுவதும் பல கிரிமினல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டன.

அதில் ஒரு வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் தற்போது அவர்களுக்கு பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக பதஞ்சலி ஆயுர்வேத் விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து பதஞ்சலி மருந்துகளின் விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் பொய்யான விளம்பரங்களின் மூலம் மக்களை தவறாகி வழிநடத்திய அதன் நிறுவனர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.

தொடர்ந்து பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து உத்தரவின்படி பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டும் மன்னிப்பு கேட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது. 

பிப்ரவரி 15 அன்று அவர்களை ஆஜராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக நீதிமன்றம் (பாலக்காடு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்) பிப்ரவரி 1 ஆம் தேதி ஆஜராகுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட்களை பிறப்பித்திருந்தது.

Previous Post

“தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம்”: அதிமுக CTR.நிர்மல் குமார் குஷி ட்வீட்…

Next Post

குடியரசு தலைவர் குறித்து தவறான கருத்து: சோனியா காந்தி மீது புகார்..!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
குடியரசு தலைவர் குறித்து தவறான கருத்து: சோனியா காந்தி மீது புகார்..!

குடியரசு தலைவர் குறித்து தவறான கருத்து: சோனியா காந்தி மீது புகார்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️❤️🩵🩵🩵🩵🩵🩵💚💚💚💚💚💚💛💛💛💛💛💛❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In