Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பேருந்து.. பற்றி எரிந்த தீ! 15 பேர் படுகாயம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 1, 2025
in அரசியல் செய்திகள்
1
Trichy Bus Accident: மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பேருந்து.. பற்றி எரிந்த தீ! 12 பேர் படுகாயம்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளத்தில் பாய்ந்த தனியார் ஆம்னி பேருந்து, மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்திருக்கும் நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற இந்த ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயமைடந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

சுமார் 40 பயணிகளுடன் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, திருச்சி – மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே யாகபுரம் பகுதியை பயணித்தது. அங்கே சாலை மேம்பால பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியே சென்று நெடுஞ்சாலைக்கு திரும்ப வேண்டும்.

மின் கம்பத்தில் மோதி தீ விபத்து

இதையடுத்து சர்வீஸ் சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்னி பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனாது.

மின் கம்பத்தில் மோதியதால் திடீரென தீப்பற்றிய நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் அலறியடித்து கொண்டு வெளியேறினார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பேருந்தில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்க உதவினர்.

இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பயணிகளை மீட்டு தீ பற்றி எரிந்துகொண்டிருந்த பேருந்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

15 பேர் படுகாயம்

இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை அக்கம் பக்கத்தினரும், போலீசாரும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 15 பேர் படுகாயமடைந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு பேருந்தில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானாது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீண்டும் கார் விபத்து

பேருந்து விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் ஒரு கார் விபத்துக்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து நடைபெற்றிருக்கும் நிலையில், இந்த பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னதாக, பைப்பாஸ் பிரிவு சாலையில் பாலம் வேலை நடைபெறுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதை கவனித்த ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்து இடதுபுறம் செல்ல முயன்றதாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. சுமார் 30 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்ததாக சொல்லப்படும் நிலையில், அதில் இருந்த பயணிகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பிதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

அடையாள அட்டை, மருத்துவ உதவி… டெலிவரி பாய் போன்ற Gig தொழிலாளர்களுக்கு அறிவிப்பு..

Next Post

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மீது வழக்கு தொடர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    டிரைவர்கள் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு விபத்துகளை ஏற்படுத்தி விட்டு காரணங்களை சொல்லக்கூடாது. முட்டாப் பயல்களா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In