குறிப்பாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக, “குண்டு கையில் இருக்கிறது. அதை இன்னும் வீசவில்லை. என் தலைவன் கொடுத்த அந்த குண்டை வீசினால் முற்றிலுமாகப் பற்றி எரிந்து விடும். அங்குப் புல் பூண்டு கூட முளைக்காது. ஒரு கோடி எரிமலையைக் காத்த தீதான் எனது தலைவன். நாங்கள் கொளுத்திப் போட்டுட்டு போயிடுவோம். தமிழகமே பற்றி எரியும்’ என ஈரோடு இடைத்தேர்தல் பிரசார மேடையில் பேசியுள்ளார். மேலும், கொலை வெறியில் உள்ளதாகவும் ஆவேசமாக மிரட்டி உள்ளார்.

இவரைப் போலவே இவரது கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் சாட்டை முருகன் என்பவர், பிரசார மேடையைப் பயன்படுத்திச் செருப்பைத் தூக்கி பொதுமக்களிடம் காண்பிக்கிறார். அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி வருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தி மிரட்டி வருகிறார், இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரிய கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி எனப் புரிந்து கொள்ள முடிகிறது. அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். ஆகவே இவரின் நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இவரது இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ள புகழேந்தி, சீமான் பேசிய ஆதாரங்களை மனுவில் இணைத்துள்ளார்.
இந்த மனுவைத் தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் அளித்துள்ளார்.
