ஜப்பானில் மேட் இன் இந்தியா, ஜிம்னி 5-டோர் அறிமுகம் செய்வது, எங்கள் உற்பத்தி திறனில் உலகளாவிய மட்டத்தில் சிறந்து விளங்குவதற்கு ஒரு சிறந்த சான்றாகும். 2024-25 நிதியாண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடலாக உள்ளது மாருதி சுசுகியின் ஜிம்னி.
அதே வேளையில் மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா சந்தைகளில் அதன் வெற்றிக்குப் பிறகு, ஜப்பானில் உள்ள வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஜிம்னி ஏற்றுமதியானது, ‘உலகிற்காக’ இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் இது உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் ஜிம்னி நோமேட் என்ற பெயரில் இந்த மாடலை ஏப்ரல் 3 ஆம் தேதி ஜப்பானில் அறிமுகம் செய்ய உள்ளது.
