அதையடுத்து சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த சூரஜ் மற்றும் பங்கஜ் லால்வானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “புதுச்சேரி பா.ஜ.க-வின் தலைவரும், ராஜ்ய சபா எம்.பி-யுமான செல்வகணபதி 20 கிலோ தங்கக் கட்டிகளை எங்களிடம் கொடுத்து விற்றுத் தருமாறு கூறினார். அதன்படி சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஒரு தங்க வியாபாரியிடம் 15 கிலோ தங்கத்தையும், புதுச்சேரியில் 5 கிலோ தங்கத்தையும் கமிஷன் அடிப்படையில் விற்றுக் கொடுத்தோம்” என்று வாக்குமூலம் அளித்தனர்.
