Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 30, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழா, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளார். இருப்பினும், அமித் ஷாவின் வருகையின்போது, அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் புகழை பாஜகவினர் சீர்குலைப்பதாகக் கூறியதுடன், அமித் ஷாவின் வருகையின்போது கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

அறிக்கை

கடந்த டிசம்பர் 17 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை மிகமிக இழிவாகப் பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறியிருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணயசபை… pic.twitter.com/uX46pe3Hcq

— Selvaperunthagai K (@SPK_TNCC) January 30, 2025

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, சத்யமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, “மகாத்மா காந்தியின் புகழை அண்மைக் காலமாக பாஜகவினர் சீர்குலைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவரின் இடத்தில் சவாக்கரை நிலைநிறுத்துவதைத்தான் பாஜகவினர் திட்டமாக வைத்துள்ளனர். ஆனால், மனிதர்கள் உள்ளவரையில் மகாத்மா காந்தியின் புகழ் நீடித்திருக்கும்.

மேலும், தமிழகத்துக்கு வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, காங்கிரஸார் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ‘காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? – முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!





.

Previous Post

Tamilnadu News Live January 30, 2025: Seeman vs Kanimozhi: கனிமொழி பெரியாரிஸ்ட்டா?.. கடுமையாக விமர்சித்த சீமான்.. திடீரென ஜெயலலிதாவை புகழ்ந்தது ஏன்?

Next Post

US Plane Crash: `சடலமாக 18 உடல்கள் மீட்பு; ஒருவர் இந்தியர்..’ -விமான விபத்தால் பெரும் சோகம் | US Plane Crash: 18 bodies recovered; One is Indian -Tragedy

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
US Plane Crash: `சடலமாக 18 உடல்கள் மீட்பு; ஒருவர் இந்தியர்..’ -விமான விபத்தால் பெரும் சோகம் | US Plane Crash: 18 bodies recovered; One is Indian -Tragedy

US Plane Crash: `சடலமாக 18 உடல்கள் மீட்பு; ஒருவர் இந்தியர்..' -விமான விபத்தால் பெரும் சோகம் | US Plane Crash: 18 bodies recovered; One is Indian -Tragedy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In