Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரோடு `மத்தான் கரோ உகத சூரஜ்’ – திமுக-வின் இந்தி துண்டறிக்கை-இதுதான் மொழி உணர்வா?-விமர்சிக்கும் நாதக

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 29, 2025
in அரசியல் செய்திகள்
0
ஈரோடு `மத்தான் கரோ உகத சூரஜ்’ – திமுக-வின் இந்தி துண்டறிக்கை-இதுதான் மொழி உணர்வா?-விமர்சிக்கும் நாதக
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரசாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பெரியாரின் சொந்த ஊரில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் திமுக-வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கொள்கைரீதியிலான மோதலாகவும் பார்க்கப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க பிரசாரக் களத்தில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் திருக்குறளை இழிவாகப் பேசினார் என்றும் சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அத்துடன் தமிழ்மொழி, தமிழ்த்தேசியம் குறித்தும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர், மாதவ கிருஷ்ணா வீதி பகுதிகளில் இந்தியில் அச்சிட்டு திமுக-வினர் விநியோகித்துள்ள துண்டறிக்கை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துண்டறிக்கை

துண்டறிக்கை

அந்த துண்டறிக்கையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் புகைப்படத்துடன், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என்று இந்தியில் “மத்தான் கரோ உகத சூரஜ்” என அச்சிடப்பட்டுள்ளது. இந்த துண்டறிக்கை சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் வைராலாக்கி வருகின்றனர். அதில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த திமுக… தற்போது, அதே இந்தியை அச்சிட்டு வாக்கு கேட்கும் நிலைமைக்குச் சென்றுவிட்டது. இதுதான் திமுக-வின் மொழி உணர்வா? என்று அந்த துண்டறிக்கையை வைரலாக்கி வருகிறது.

துண்டறிக்கை

துண்டறிக்கை

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “இந்திரா நகர்,மாதவ கிருஷ்ணா வீதி பகுதிகளில் பல தலைமுறைகளாக ராஜஸ்தான் மக்கள் வாழ்கின்றனர். அதில், சுமார் 7 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களிடம் வாக்கு சேகரிக்க இந்தியில் துண்டறிக்கை அச்சிட்டு வாக்கு கேட்பது வழக்கம். கடந்த காலங்களில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலின்போது, இந்தியில் அச்சிட்டப்பட்ட துண்டறிக்கைகளை விநியோகித்துள்ளோம். இதற்கும் மொழி உணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றனர்.



.

Previous Post

மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்.. பனையூரில் இருந்து இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

Next Post

சைஃப் அலிகான் வழக்கு: கைதானவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சைஃப் அலிகான் வழக்கு: கைதானவருக்கு 14 நாள்கள்  நீதிமன்றக் காவல்!

சைஃப் அலிகான் வழக்கு: கைதானவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In