Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`நமது நாட்டின் பாரம்பர்ய அறிவை ஆங்கிலேயர் களவாடிச் சென்றனர்!’ – ஆளுநர் ஆர்.என்.ரவி நெல்லையில் பேச்சு | British rulers take away our heritage knowledge, says governor r.n.ravi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 29, 2025
in அரசியல் செய்திகள்
0
`நமது நாட்டின் பாரம்பர்ய அறிவை ஆங்கிலேயர் களவாடிச் சென்றனர்!’ – ஆளுநர் ஆர்.என்.ரவி நெல்லையில் பேச்சு | British rulers take away our heritage knowledge, says governor r.n.ravi
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.

அதில் அவர், “நெல்லை மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாகப் போராடிய ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன் போன்ற வீரமிக்க சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கொண்ட புண்ணிய பூமி இது. வ.உ.சிதம்பரனார் தொடங்கிய சுதேசி கப்பல் இயக்கம் நாடு முழுவதற்கும் சுதந்திர போராட்டத்தை எதிரொலிக்கச் செய்தது.

ஆங்கிலேயர்களை எதிர்த்த இளம் வீரர் வாஞ்சிநாதன். இந்த மண்ணில் ஆங்கில ஆட்சியாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டார். மகாகவி பாரதி தனது பாடல்கள் மூலம் நாடு முழுவதும் சுதந்திர உணர்வை ஊட்டினார் . தற்போதைய இளைஞர்கள், நமது நாட்டின் வரலாற்றையும் அதன் பாரம்பர்யத்தையும் உணர வேண்டும். 2047-ல் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ஆனால், 2014-ல் 16-வது இடத்தில் இருந்தது. தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியிருக்கும். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்களாகிய நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அறிவு சார் சொத்துகளை உருவாக்குவதில் மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும்.



.

Previous Post

வேங்கைவயல்: ”தனி மனித பிரச்னையே காரணம்” – நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதம் | Vengaivayal: “The reason is a personal issue” – Tamil Nadu government’s argument in court

Next Post

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In