Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராஷ்டிரபதி பவனில் குடியேற மறுத்த குடியரசு தலைவர் யார் தெரியுமா..? குடியேறியவுடன் செய்த அதிரடி செயல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 28, 2025
in அரசியல் செய்திகள்
0
ராஷ்டிரபதி பவனில் குடியேற மறுத்த குடியரசு தலைவர் யார் தெரியுமா..? குடியேறியவுடன் செய்த அதிரடி செயல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



ராஷ்டிரபதி பவன்

இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமாக திகழும் ராஷ்டிரபதி பவன், தேசிய தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த குடியரசுத் தலைவரின் மாளிகை, 1929 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவன் முதலில் “வைஸ்ராய் மாளிகை” என்று அழைக்கப்பட்டது. இந்த இல்லம் மொத்தம் 3,40,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 56 படுக்கையறைகள், 31 குளியலறைகள் மற்றும் 11 உணவகங்கள் உட்பட மொத்தம் 340 அறைகள் உள்ளன.

வார நாட்களில் ராஷ்டிரபதி பவன் பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதிக்கப்படுகிறது. மிகவும் சிறப்புமிக்க இந்த குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒருவர் குடியேற மறுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ராஜேந்திர பிரசாத்தின் எதிர்ப்பு

நேருவின் முதல் அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், முதல் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றிய ராஜேந்திர பிரசாத் தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேற மறுத்தார். சி. ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட தலைவர்கள் குடியரசுத் தலைவராக நியமிக்கப்படலாம் என கருத்துக்கள் நிலவி வந்தாலும், 1950 ஜனவரி 24 அன்று அரசியல் சட்ட மன்றத்தின் இறுதி கூட்டத்தில் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் வைஸ்ராயின் முன்னாள் இல்லமான ஆடம்பரமான வைஸ்ராய் மாளிகையை ராஷ்டிரபதி பவன் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார் ராஜேந்திர பிரசாத். அவர் பதவியேற்றதும் இந்த பெயர்மாற்றத்தை செயல்படுத்தினார்.

நான்கு மாடிகள் கொண்ட இந்த கட்டடம் 330 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த மாளிகையாகும். மிகவும் ஆடம்பரமான இந்த மாளிகை, மிகவும் ஆடம்பரமாகவும், மிகவும் செலவானதாகவும் இருந்தது. ராஜேந்திர பிரசாத் காந்தியின் கொள்கைகளை கொண்டிருந்ததால், இந்த ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. மேலும் ராஷ்டிரபதி பவனில் வசிப்பது மக்களுடனான தனது நெருக்கத்தைப் பிளவுபடுத்தும் என நினைத்தார். மேலும் இதற்காகும் செலவுகளை வேறு எங்காவது பயன்படுத்தலாம் என்றும் நினைத்தார்.

ஆனால், அன்றைய பிரதமராக இருந்த நேருவும், சர்தார் வல்லபாய் படேலும், குடியரசுத் தலைவரின் கண்ணியத்தையும், அதிகாரத்தையும், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்டவைகளைக் கூறி, அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய பின்னரும், ராஜேந்திர பிரசாத் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். அங்கிருந்த 330 அறைகளை உடனடியாக மூடச் சொன்ன அவர், 2 அறைகளை மட்டும் தனக்காகத் திறக்கச் சொன்னார். விருந்தினர்களுக்கு 8 அறைகளை மட்டும் அவர் ஒதுக்கினார்.

இதையும் படிக்க: சதமடிக்கும் இஸ்ரோ.. 100-வது ராக்கெட் செலுத்த உள்ள செயற்கைக்கோள்.. இத்தனை அம்சங்களா?

மேலும் சமையலறையில் அசைவ உணவுகளை சமைக்கக்கூடாது என உத்தரவிட்ட அவர், டைனிங் டேபிளை எடுக்கச் சொல்லி, எளிமையான வாழ்வுக்கு உதாரணமாக, சமணங்கால் போட்டு சாப்பிட்டு வாழ்ந்தார்.

ராஜேந்திர பிரசாத் மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியும், ஆடம்பர வாழ்க்கையை விரும்பவில்லை. இவர்கள் மட்டுமல்லாமல், குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற நீலம் சஞ்சீவி ரெட்டியும், இந்த ஆடம்பர செலவுகளைக் குறைத்து எளிமையாக வாழ்ந்தனர்.

First Published :

January 28, 2025 11:57 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ராஷ்டிரபதி பவனில் குடியேற மறுத்த குடியரசு தலைவர் யார் தெரியுமா..? குடியேறியவுடன் செய்த அதிரடி செயல்



.

Previous Post

நெடுமொழியனூர் அணைக்கட்டு – புதுச்சேரியிலிருந்து இந்த வார இறுதியில் சுற்றுலா செல்ல வேண்டிய இடம்! | Nedumozhiyanur check dam in kooteripattu near mailam is a must visit place from Pondicherry in this weekend

Next Post

Uttar Pradesh Accident: உ.பி.யில் ஆன்மிக நிகழ்வில் மேடை சரிந்து விபத்து.. 7 பேர் பலி, 40 பேர் காயம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Uttar Pradesh Accident: உ.பி.யில் ஆன்மிக நிகழ்வில் மேடை சரிந்து விபத்து.. 7 பேர் பலி, 40 பேர் காயம்

Uttar Pradesh Accident: உ.பி.யில் ஆன்மிக நிகழ்வில் மேடை சரிந்து விபத்து.. 7 பேர் பலி, 40 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In