தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி பயிற்சி கோவையில் ஜன. 31-ம் தேதி நடைபெற உள்ளது.
கோவையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, சாட் ஜிபிடி (ChatGPT)-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்.
பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்:
சாட் ஜிபிடி அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள்: சாட் ஜிபிடி-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். தெளிவான இலக்கு நிர்ணயம்: சாட் ஜிபிடி-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள்.
மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: சாட் ஜிபிடி-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்.
கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் ஏஐ கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும், சாட் ஜிபிடி-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.
நேரடி சிக்கல் தீர்வு: இடுகையாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில், சாட் ஜிபிடி மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்கவும்.
