Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Republic Day 2025 | “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் நிதிச்சுமை குறையும்”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 27, 2025
in அரசியல் செய்திகள்
0
Republic Day 2025 | “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் நிதிச்சுமை குறையும்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:January 26, 2025 2:25 PM IST

Republic Day 2025 | ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் நிதிச்சுமை குறைக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆதரவு தெரிவித்துள்ளார்.

republic day

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றிவைத்தார். நாட்டின் பாதுகாப்பு வல்லமையை வெளிப்படுத்தும் வகையில், போர் விமானங்களின் சாகசங்கள், பாதுகாப்புத் தளவாடங்களின் கோலாகல அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், டெல்லியில் களைகட்டின. இதன் முதல்கட்டமாக போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய பிரதமர், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் கருத்துக்களை பதிவிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்புடன் கடமைப் பாதைக்கு குதிரை வண்டியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகைதந்தார். இதேபோல, கடமைப் பாதைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த மக்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, விழாவுக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் தேசியக் கொடியை திரௌபதி முர்மு ஏற்றிவைத்தார். 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிராபோவோ சுபியன்டோ கலந்துகொண்டார்.

வானில் ஹெலிகாப்டரில் இருந்தபடி தேசியக் கொடி பறக்கவிடப்பட்ட நிலையில், மலர்களை தூவியும் கொண்டாடப்பட்டது. 300 கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், இந்தோனேஷியாவிலிருந்து அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அணிவகுத்து வந்தனர்.

மேலும், ராணுவத்தின் குதிரைப் படையினர் அணிவகுத்த நிலையில், ராணுவத்தின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பீரங்கிகள், ராணுவ டாங்கிகள், பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், ராக்கெட் ஏவு கட்டமைப்பு ஆகியவற்றின் அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.

Also Read | Republic Day 2025: குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!

முன்னதாக, நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி, நாட்டு மக்களிடம் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க புதிய குற்றவியல் சட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நிர்வாக நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் எனவும் நிதிச்சுமையை குறைக்கும் எனவும் திரௌபதி முர்மு குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் கல்வியின் தரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

January 26, 2025 2:22 PM IST



.

Previous Post

Vengaivayal – தலித் வெறுப்போடு நடத்தப்பட்ட விசாரணை – வழக்கறிஞர் ப.பா.மோகன் | Vikatan

Next Post

ஜெ. ஆட்சியில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தாரா சசிகலா? | TRUMP | RG KAR CASE | RTI Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெ. ஆட்சியில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தாரா சசிகலா? | TRUMP | RG KAR CASE | RTI Imperfect Show

ஜெ. ஆட்சியில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தாரா சசிகலா? | TRUMP | RG KAR CASE | RTI Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In