
Last Updated:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐ.ஜி.க்கள் துரை குமார், ராதிகா உள்ளிட்ட 21 பேரும் உள்ளனர்.
குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 76-ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவரும், மாநிலங்களில் அந்தந்த ஆளுநர்களும் தேசியக் கொடியை பறக்கவிடுகின்றனர்.
இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐ.ஜி.க்கள் உட்பட 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
ஆண்டுதோறும் குடியரசு தினத்தின் போது காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஐ.ஜி.க்கள் துரை குமார், ராதிகா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஊர்க்காவல் படை உதவி கமாண்டன்ட் ஜெனரல் மஞ்சித் சிங் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் கண்காணிப்பாளர் தினகரன், துணை கண்காணிப்பாளர் மதியழகன் உட்பட 21 பேருக்கு மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
January 26, 2025 7:33 AM IST
