Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

ஆறுபடை வீடு முருகன் கோவில் டூர்…வெறும் 4 நாட்களில்…எவ்வளவு கட்டணம் தெரியுமா? | Arupadai Veedu Murugan Temple tour with in 4 days

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 24, 2025
in சமீபத்திய செய்திகள்
0
ஆறுபடை வீடு முருகன் கோவில் டூர்…வெறும் 4 நாட்களில்…எவ்வளவு கட்டணம் தெரியுமா? | Arupadai Veedu Murugan Temple tour with in 4 days
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவரது வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக புராணங்களில் போற்றப்படும் ஆறு கோவில்களை ஆறுபடை வீடுகள் என குறிப்பிடுகிறோம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடைகள் அமைந்துள்ள கோவில்கள் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஆறு கோவில்களுக்கும் ஒரே சமயத்தில் செல்ல நினைப்பவர்கள்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறை டூர் பேக்கேஜ் மூலமாக சென்று வரலாம்.

Murugan Temple

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவசமாக ஆறுபடை வீடு முருகன் கோவில்களுக்கும் ஒவ்வொரு கட்டமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்கள். விண்ணப்பம் செய்பவர்களின் தகுதியான 207 பேர் தேர்வு செய்யப்பட்டு, பஸ்சில் அழைத்து செய்யப்படுவார்கள். இந்த இலவச ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்பதற்கு சில குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பதுடன், வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இது தவிர கட்டணம் செலுத்தி ஆறுபடை வீடு முருகன் கோவில்களுக்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்று வரலாம்.

Murugan Temple

பயண விபரம்

முதல் நாள் –

காலை சென்னை சுற்றுலாத்துறை வளாகத்தில் இருந்து காலை 06.30 மணிக்கு பயணம் புறப்பட்டு, நேராக திருத்தணி முருகன் கோவிலுக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும். வழியில் காலை உணவு வழங்கப்படும். திருத்தணியில் சாமி தரிசனம் முடித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மாலை 06.30 மணிக்கு சுவாமி மலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு, இரவு 08.30 மணிக்கு தஞ்சாவூரில் இரவு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.

2ம் நாள் –

காலை 9 மணிக்கு காலை உணவு சாப்பிட்ட பிறகு பழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பகல் 1 மணிக்கு பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்த பிறகு, பகல் உணவு வழங்கப்படும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை வந்து இரவு உணவை முடித்து விட்டு, அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

Murugan Temple

3ம் நாள் –

காலை 7 மணிக்கு மதுரையில் காலை உணவு சாப்பிட்டு விட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பகல் 12 மணிக்கு திருச்செந்தூரில் பகல் உணவு வழங்கப்படும். கடல், நாழிக்கிணறு ஆகியவற்றில் நீராடிய பிறகு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்லப்படுவார்கள். சாமி தரிசனத்திற்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இரவு மதுரை வந்து உணவு சாப்பிட்ட பிறகு அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

4ம் நாள் –

காலை 8 மணிக்கு மதுரையில் காலை உணவு சாப்பிட்டு விட்டு, பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு தரிசனம் முடிந்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு சென்னையில் சுற்றுலாத்துறை வளாகத்தில் வந்து பயணிகள் இறக்கி விடப்படுவார்கள்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த பயணம் நிறைவடையும். வால்வோ, ஏசி, ஏசி அல்லாதது என மூன்று வகையான வாகனங்களில் இந்த டூர் பயணம் உண்டு. இதில் உங்களின் வசதிக்கு ஏற்ப பஸ்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த டூர் பேக்கேஜிற்கு ஒரு நபருக்கு ரூ.9000 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. பஸ் கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்தும் இந்த கட்டணத்திற்குள் அடங்கும். தேர்வு செய்யப்படும் பஸ் வகை, குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து கட்டண தொகை மாறுபடும்.

  • குடியரசு தின விடுமுறைக்கு குழந்தைகளுடன் ஊர் சுற்ற போறீங்களா? குட்டீசை ஜாலியாக்கும் சென்னையின் டாப் 6 இடங்கள்
    குடியரசு தின விடுமுறைக்கு குழந்தைகளுடன் ஊர் சுற்ற போறீங்களா? குட்டீசை ஜாலியாக்கும் சென்னையின் டாப் 6 இடங்கள்
  • ரூ.10,000 பட்ஜெட்டில் சம்மர் டூர் போக சூப்பர் ஐடியா...எந்தெந்த இடங்களுக்கு செல்ல முடியும்?
    ரூ.10,000 பட்ஜெட்டில் சம்மர் டூர் போக சூப்பர் ஐடியா…எந்தெந்த இடங்களுக்கு செல்ல முடியும்?
  • ஆதியோகி ரத யாத்திரை – திருச்சி மக்களை ஆசீர்வதிக்க வரும் ஆதியோகி!
    ஆதியோகி ரத யாத்திரை – திருச்சி மக்களை ஆசீர்வதிக்க வரும் ஆதியோகி!
  •  ரூ.525 கோடி மதிப்பீட்டில், 1,500 பேர் அமரக்கூடிய கலைஞர் மாநாட்டு மையம் – எங்கே தெரியுமா!
    ரூ.525 கோடி மதிப்பீட்டில், 1,500 பேர் அமரக்கூடிய கலைஞர் மாநாட்டு மையம் – எங்கே தெரியுமா!
  • மதுரைக்கு பக்கத்தில் அமைந்துள்ள சூப்பரான வார இறுதி சுற்றுலாத் தலங்கள் இவை தான்!
    மதுரைக்கு பக்கத்தில் அமைந்துள்ள சூப்பரான வார இறுதி சுற்றுலாத் தலங்கள் இவை தான்!
  • உலகின் பணக்கார குடும்பம் இது தான் – 4,000 கோடியில் அரண்மனை, 700 கார்கள்!
    உலகின் பணக்கார குடும்பம் இது தான் – 4,000 கோடியில் அரண்மனை, 700 கார்கள்!
  • புதுச்சேரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாற்றப்படும் வீடுகள் – என்ன காரணம்?
    புதுச்சேரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாற்றப்படும் வீடுகள் – என்ன காரணம்?
  • குடியரசு தின லீவுக்கு பெங்களூருவில் இருந்து ஒரே நாளில் சுற்றி பார்த்து விட்டு வர ஏற்ற 10 இடங்கள்
    குடியரசு தின லீவுக்கு பெங்களூருவில் இருந்து ஒரே நாளில் சுற்றி பார்த்து விட்டு வர ஏற்ற 10 இடங்கள்
  • தமிழ்நாட்டில் நீங்கள் கட்டாயம் காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள் இவை தான் - ஏன் தெரியுமா?!
    தமிழ்நாட்டில் நீங்கள் கட்டாயம் காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள் இவை தான் – ஏன் தெரியுமா?!
  • இந்தியாவிலேயே பணக்கார ரயில் இது தானாம் – ஒரு ஆண்டுக்கு ரூ. 1,76,06,66,339 வருமானம்!
    இந்தியாவிலேயே பணக்கார ரயில் இது தானாம் – ஒரு ஆண்டுக்கு ரூ. 1,76,06,66,339 வருமானம்!
  • சென்னை to திருப்பதி ஒரு நாள் பயணம் – முன்பதிவு எதுவும் தேவையில்லை, சூப்பர் பிளான் இதோ!
    சென்னை to திருப்பதி ஒரு நாள் பயணம் – முன்பதிவு எதுவும் தேவையில்லை, சூப்பர் பிளான் இதோ!
  • கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா – தெரிந்து கொள்ளுங்கள்!
    கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா – தெரிந்து கொள்ளுங்கள்!

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet



.

Previous Post

Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி!

Next Post

’சின்ன மருமகள்’ ஒளிபரப்பு நேரம் மாற்றம்! அய்யனார் துணை சீரியல் எப்போது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’சின்ன மருமகள்’ ஒளிபரப்பு நேரம் மாற்றம்! அய்யனார் துணை சீரியல் எப்போது?

’சின்ன மருமகள்’ ஒளிபரப்பு நேரம் மாற்றம்! அய்யனார் துணை சீரியல் எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In