மகாராஷ்டிராவில், எப்போதும் சர்ச்சையாக பேசுவதை வழக்கமாக கொண்டவர் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் நிதேஷ் ரானே. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனாவார்.
தற்போது புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நிதேஷ் ரானே, நடிகர் சைஃப் அலிகானை குப்பை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “‘பங்களாதேஷிகள் மும்பையில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதற்கு முன்பு அவர்கள் ரோடு தடுப்புக்கு வெளியில் நின்றார்கள். ஆனால் இப்போது அவர்கள் வீட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அவரை (சைஃப்) தூக்கிச்செல்ல வந்திருக்கலாம். அது நல்லது. குப்பைகளை அகற்றவேண்டும்.
சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும்போது நடனமாடிக்கொண்டே வருகிறார். இதனால் அவர் உண்மையிலேயே பிளேடால் தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் பேசிக்கொண்டே நடனமாடிக்கொண்டு வெளியில் வருகிறார்.
