போராட்டத்தின் போது, “உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். மக்கள் நம்பும்படி நாடகம் ஆடுவதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே. இந்த விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக ஒரு நிலைப்பாடா?” என்று தி.மு.கவை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விஜய்யை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.
“‘எல்லாம் ஏதேதோ பேசுகிறார்கள். நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுகிறான். அவங்க அப்பனையே நாங்க தான் அறிமுகப்படுத்தினோம். அவன் எல்லாம் இப்பொழுது நமக்கு சவால் விடுகிறான். ஒன்றை மட்டும் சொல்கிறேன், திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததாகவும் இல்லை நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறுகள் நிறைய இருக்கிறது… அதற்குள்ளே போகக்கூடாது.
