Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தமிழ் மொழி, கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி..” – ஆளுநர் ரவி | governor ravi praise to pm modi for thiruvalluvar cultural centre

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2025
in அரசியல் செய்திகள்
0
“தமிழ் மொழி, கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி..” – ஆளுநர் ரவி | governor ravi praise to pm modi for thiruvalluvar cultural centre
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2015-ம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாசார மையம் அமைக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிந்து, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிலையில், அந்தக் கலாசார மையத்துக்கு `திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என பெயரிடப்பட்டுள்ளது.

Thiruvalluvar Cultural Center

Thiruvalluvar Cultural Center

இதை வரவேற்று பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், “யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு முக்கியச் சான்றாக விளங்குகிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் எக்ஸ் பக்கத்தில், “இந்திய உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கலாச்சார மையத்துக்கு “திருவள்ளுவர் கலாச்சார மையம்” என்று மறுபெயரிடப்பட்டிருப்பது, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரிக தொடர்பைக் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி

Next Post

ஜோதிடம் பலிக்காத ஆத்திரம்.. கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரையே கொலை செய்த பெண் உள்ளிட்ட இருவர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜோதிடம் பலிக்காத ஆத்திரம்.. கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரையே கொலை செய்த பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஜோதிடம் பலிக்காத ஆத்திரம்.. கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரையே கொலை செய்த பெண் உள்ளிட்ட இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In