அதேபோல, டெல்டா மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘சென்னை – வேலூர் முதல் டெல்டா- தூத்துக்குடி பகுதிகள் வரை மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை பகுதிகளில் மிக கன மழை பதிவாகியுள்ளது, இந்த மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு அதிகமுள்ளது.
திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
பொங்கலுக்கு முந்தைய நாள்களில் பெய்திருந்த மழையளவைவிட இப்போது அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் இதனைக் கருத்திற்கொண்டு பயிர் அறுவடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல, தென் தமிழகத்திலும் மழை பெய்யும். மாஞ்சோலை பகுதிகளிலும் மழை பெய்யும்.
பெங்களூரிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
