
Last Updated:
பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே கயா மற்றும் கோயம்புத்தூர் இடையே 03679/03680 என்ற கயா-கோயம்புத்தூர்-கயா வாராந்திர சிறப்பு ரயிலை ஜனவரி 4 முதல் இயக்குகி வருகிறது.
பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே கயா மற்றும் கோயம்புத்தூர் இடையே 03679/03680 என்ற கயா-கோயம்புத்தூர்-கயா வாராந்திர சிறப்பு ரயிலை ஜனவரி 4 முதல் இயக்குகி வருகிறது. இந்த வாராந்திர சிறப்பு ரயிலை பிரயாக்ராஜ் சியோகி-ஜபல்பூர்-நாக்பூர்-வாரங்கல்-விஜயவாடா-காட்பாடி-சேலம் வழியாக கயா மற்றும் கோயம்புத்தூர் இடையே இயக்குகிறது.
இதனிடையே கயா ஜங்க்ஷனில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, இந்த ரயிலின் முனையம் (டெர்மினல்) தற்காலிகமாக தன்பாத் ஜங்க்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் கயாவிற்கு பதிலாக தன்பாத்திலிருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது புதிய கால அட்டவணையின்படி, ரயில் எண் 03679 தன்பாத்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 18-ஆம் தேதி தன்பாத்தில் இருந்து இயக்கப்படும். ஜனவரி 25, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 8 தவிர ஒவ்வொரு சனிக்கிழமையும் இது இயக்கப்படும். அதே நேரம் கோயம்புத்தூர்-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 28, பிப்ரவரி 4 மற்றும் பிப்ரவரி 11-ஆம் தேதி தவிர ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும்.
தன்பாத்திலிருந்து புதிய அட்டவணை:
புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சரஸ்வதி சந்திரா பகிர்ந்து கொண்டுள்ளார். 03679 தன்பாத்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தன்பாத்தில் இருந்து 16:10 மணிக்குப் புறப்பட்டு, 16:40 மணிக்கு நெசுப் கோமோவிலும், 17:00 மணிக்கு பரஸ்நாத்திலும், 17:23 மணிக்கு ஹசாரிபாக் சாலையிலும், 18:02 மணிக்கு கோடெர்மாவிலும், 19:30 மணிக்கு கயாவிலும் நிற்கும். பின்னர் அது 19:35 மணிக்கு கோயம்புத்தூருக்குப் புறப்படும்.
அதே போல 03680 கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் 07:50 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை 08:55 மணிக்கு கயாவை சென்றடையும். அங்கிருந்து இந்த ரயில் 09:00 மணிக்குப் புறப்பட்டு, 10:25 மணிக்கு கோடெர்மாவிலும், 11:00 மணிக்கு ஹசாரிபாக் சாலையிலும், 11:18 மணிக்கு பரஸ்நாத்திலும், 11:48 மணிக்கு நெசுப் கோமோவிலும், 13:00 மணிக்கு தன்பாத்தை வந்தடையும்.
டெஹ்ரியில் (Dehri) கூடுதல் நிறுத்தம்…இதனுடன் இந்த சிறப்பு ரயிலுக்கு Dehri-on-Sone நிலையத்தில் நின்று செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்- 03679 தன்பாத் – கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில், Dehri-on-Sone-ல் இரவு 8.40 மணிக்கு நின்று, இரவு 8.42 மணிக்கு அடுத்த பயணத்திற்காக புறப்படும். இதேபோல், ரயில் எண்-03680 கோயம்புத்தூர்-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில், Dehri-on-Sone-ல் காலை 6.48 மணிக்கு நின்று, அடுத்த பயணத்திற்காக காலை 6.50weekly special train, Coimbatore, Gaya, வாராந்திர சிறப்பு ரயில், கோயம்புத்தூர், கயா.
January 16, 2025 2:34 PM IST
கயா – கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில்… மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்!
