Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ஆதரிக்கும் அண்ணாமலை; சொந்தம் கொண்டாடும் தமிழிசை' – பாஜகவை விமர்சிக்க நாதக தயங்குகிறதா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 13, 2025
in அரசியல் செய்திகள்
0
`ஆதரிக்கும் அண்ணாமலை; சொந்தம் கொண்டாடும் தமிழிசை' – பாஜகவை விமர்சிக்க நாதக தயங்குகிறதா?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


`சீமான் எங்கள் டீம்’ என பா.ஜ.க தலைவர்கள் பிரகடனப்படுத்திவரும் இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் கனத்த மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. பா.ஜ.க-வை விமர்சிக்க கட்சித் தலைமை தடை ஏதும் விதித்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்து ராவணன் குடில் வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியுள்ளது.

பெரியார்
பெரியார்

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் எதிர்ப்பை மூர்க்கமாக முன்னெடுப்பதை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், “ எங்கள் கருத்தியலை தற்போது சகோதரர் சீமான் பேச ஆரம்பித்திருக்கிறார். அவரது பேச்சுகள் எங்களுக்கு பலம் சேர்க்கின்றன. பெரியாரை சீமான் கடுமையாக எதிர்ப்பது பா.ஜ.க-வுக்கு கிடைத்த வெற்றி. அவர் எங்கள் டீம் என்று சொல்வதைவிட எங்கள் கருப்பொருள் கூட்டாளி” என சொந்தம் கொண்டாடியிருக்கிறார். அதற்கு முன்பே `அண்ணன் சீமானுக்காக ஆதாரத்தை நான் தருகிறேன்’ என ஆஜரானார் அண்ணாமலை.

தமிழிசை, அண்ணாமலை

நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், “பெரியாருக்கும் சமூநிதிக்கும் என்ன சம்பந்தம். பெரியாருக்கும் பெண்ணுரிமைக்கு என்ன சம்பந்தம் என்ற கேள்விகளை நா.த.க முன்வைக்கும்போது சீமான் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு விலைப் போய்விட்டார் என்ற விமர்சனத்தை திராவிட தரப்பும் `சீமான் எங்களுடைய பார்ட்னர்` என பா.ஜ.க-வும் சொந்தம் கொண்டாடுகிறது. நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் பி டீம் என தி.மு.க கூட்டணியினர் தரப்பில் விமர்சித்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள், `சீமான் எங்கள் டீம்’ என பா.ஜ.க சொல்லும்போது மறுத்து ஒரு வார்த்தைக்கூட சொல்லமல் மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது” என்கிறார்கள்.

சீமான்
சீமான்

இதனை ஆமோதித்துப் பேசிய நா.த.க-வின் உள்விவகாரம் அறிந்தவர்கள், “பெரியார் எதிர்ப்பில் கட்சி உறுதியாக இருக்கும் நாம் தமிழர் மீது காவிச்சாயம் பூசப் பார்க்கிறது திராவிட அமைப்புகள். இந்நிலையில் பாசிச பா.ஜ.க நமக்கு அரணாக இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுவதும் அவர்கள் ஆதரிக்கும்போது கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அமைதியாக இருப்பதும் கட்சியின் கொள்கை உறுதிக்கும் தேர்தல் அரசியலுக்கும் ஆபத்துதான். நாம் தமிழரை சுற்றி வளைக்கப் பார்க்கும் பா.ஜ.க-வை நோக்கி `நீங்கள் என்ன எங்களை ஆதரிப்பது.. சமூகநீதிக்கும், பெண்ணுரிமைக்கும் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க-வுக்கு எதாவது சம்பந்தம் இருக்கிறதா.. மனுநீதியை ஆதரிப்போரின் ஆதரவை வெறுக்கிறோம்” எனும் அடையாள அறிக்கையாவது கட்சி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்ப்பார்ப்பு” என்றனர்

பா.ஜ.க-வின் ஆதரவை நாம்தமிழர் ஏற்குமா.. எதிர்க்குமா..என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

காவி கட்டும் சீமான்… கைகொடுத்த ரஜினி! – போயஸ் சந்திப்பு பின்னணி!



.

Previous Post

’சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Next Post

மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In