சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், ” தமிழ்நாட்டில் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. பெரியாரை ஆதரித்து பேசும் இத்தனை தலைவர்களில், யாராவது ஒருவர் பொதுத்தேர்தலில் பெரியாரின் சித்தாந்தங்கள், தத்துவங்களை பேசி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறீர்களா? தடை செய்யப்பட்ட இயக்கம், பயங்கரவாதி என்று சொல்லும் என் தலைவனின் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறேன்.
திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என்று பேசினார்கள். ஆரியத்தோடு கைகோத்துக் கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும் அண்ணாவும் கூறினர். ஆனால் திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார். பெரியாரின் தத்துவங்களை மட்டுமே பேசி ஓட்டு சேகரிக்க எந்த தலைவராவது தயாராக உள்ளனரா? வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்?