நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் – 2 படத்தின் அறிவிப்பு டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் – 2 படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளான்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வரவில்லை.
புத்தாண்டு அன்று அறிவிக்கப்படலாம் என ரசிகர்களிடம் ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கான எந்த தகவலும் இல்லை.
இதையும் படிக்க: கார் பந்தயத்தில் வெற்றி… துள்ளிக்குதித்த அஜித்!
தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய விடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், அடுத்தது ’சூப்பர் சாகா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இது, ஜெயிலர் – 2 அறிவிப்பு என்பது உறுதியானது.
Time to set the theatres on fire
Get ready to witness the high-octane Announcement Teaser of Sun Pictures' next Super SagaSpecial screening in select Theatres and releasing on YouTube
on Jan 14, 6 PM ! Stay tuned for theatre list!#SunPictures #TheSuperSaga pic.twitter.com/LP2TaHVVrF— Sun Pictures (@sunpictures) January 12, 2025
இந்த நிலையில், ஜெயிலர் – 2 அறிவிப்பு டீசர் ஜன. 14 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். நேரடியாக யூடியூப் மற்றும் சில திரைகளிலும் வெளியிட உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
