தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நிலையில், விமான டிக்கெட் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, விமான கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், விமான டிக்கெட்டுகளை சொல்லவும் வேண்டுமோ?
ஜனவரி 14ஆம் தேதி செவ்வாயன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஏராளமானோர் வெள்ளிக்கிழமை மாலை முதலே சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் நேற்று முதல் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளூர் விமான நிலையங்களும் உள்ளன. இன்று சென்னை – மதுரைக்கு ரூ.17 ஆயிரம் வரையிலும், திருச்சிக்கு ரூ.14 ஆயிரம் வரையிலும் விமான டிக்கெட் வசூலிக்கப்படுகிறது.
