Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: “நிச்சயம் நியாயமாக நடக்காது என்பதால்..'' -எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 11, 2025
in அரசியல் செய்திகள்
0
ஈரோடு இடைத்தேர்தல்: “நிச்சயம் நியாயமாக நடக்காது என்பதால்..'' -எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அதனால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேர்தலுக்கான தேதி முடிவாகாமலிருந்தது. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போதே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

வி.சி.சந்திரகுமார்
வி.சி.சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டி

ஏற்கெனவே அந்தத் தொகுதியில் போட்டியிட்டது காங்கிரஸ் வேட்பாளர் என்பதால், இந்த முறையும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. தி.மு.க-வே ஈரோடு கிழக்கில் போட்டியிடும்” என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தி.மு.க-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுவார் எனத் தி.மு.க தலைமை அறிவித்தது. தி.மு.க-வை எதிர்த்து களத்தில் அ.தி.மு.க நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க தெரிவித்திருக்கிறது.

`தி.மு.க-வின் மிரட்டல், பரிசுப் பொருள்கள்..’ – எடப்பாடி

எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியான அறிக்கையில், “அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது. மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ‘அராஜகம், வன்முறை என்றாலே திமுக, திமுக என்றாலே அராஜகம், வன்முறை’ என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக் காலங்களில், தி.மு.க-வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி : அப்செட்டில் கதர்கள் – திமுக வசம் சென்ற பின்னணி!

கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க-வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. தி.மு.க-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே தி.மு.க-வினரின் வாடிக்கை. நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், தி.மு.க-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அ.தி.மு.க புறக்கணிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: விட்டுக்கொடுத்த காங்கிரஸ்; களமிறங்கும் திமுக; வேட்பாளர் யார்?



.

Previous Post

முதல்முறையாக சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை!

Next Post

ADMK Boycott Erode By Election: அராஜகம் தாங்கல! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது! ஈபிஎஸ் அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ADMK Boycott Erode By Election: அராஜகம் தாங்கல! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது! ஈபிஎஸ் அறிவிப்பு!

ADMK Boycott Erode By Election: அராஜகம் தாங்கல! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது! ஈபிஎஸ் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In