
Last Updated:
2023-24 ஆம் ஆண்டில், பாஜகவிற்கு 2,244 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது.
நடப்பாண்டில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், 2023-24 ஆம் ஆண்டில், அதிகபட்சமாக பாஜக 2,244 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இது, 2022-23 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். இதில், “PRUDENT ELECTORAL TRUST” எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளடக்கிய அறக்கட்டளை மூலம் பாஜகவிற்கு அதிகபட்சமாக 723 கோடியே 60 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இதில், மேகா பொறியியல் நிறுவனம், சீரம் நிறுவனம், மிட்டல் குழுமம் மற்றும் ஏர்டெல் அதிக அளவில் நன்கொடை கொடுத்துள்ளன.
இதேபோன்று, 2022-23 ஆம் ஆண்டில் 79 கோடியே 90 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது 288 கோடியே 90 லட்சம் ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது.
மாநில கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட தொகையும் சேர்த்து திமுகவிற்கு 75 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. அதிமுக சுமார் 5 கோடியே 76 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
கோவையைச் சேர்ந்த ஜெயபாரத் எலக்டோரல் டிரஸ்ட், திமுகவிற்கு 3 கோடியும், அதிமுகவிற்கு ஒரு கோடியும் நன்கொடை வழங்கியுள்ளது.
December 26, 2024 5:08 PM IST
