
Last Updated:
இந்த மிக பெரிய அளவிலான பரந்த ரயில்வே நெட்வொர்க்கிற்கு மத்தியில், இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை ஒரு ரயில் நிலையம் பெற்றுள்ளது.
உலகிலேயே நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டிருக்கும் நாடாக இந்தியா உள்ளது. 1,32,310 கிலோ மீட்டர்கள் (82,210 மைல்கள்) நீளம் கொண்ட ரயில் பாதை மற்றும் 7,335 ரயில் நிலையங்களை உள்ளடக்கியது நம் நாட்டின் ரயில்வே நெட்ஒர்க்.
இந்த மிக பெரிய அளவிலான பரந்த ரயில்வே நெட்வொர்க்கிற்கு மத்தியில், இந்தியாவிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை ஒரு ரயில் நிலையம் பெற்றுள்ளது. அது எந்த மாநிலத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? நாட்டிலேயே மிக நீளமான பெயரை கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் அமைந்திருக்கும் மாநிலம் நம் தமிழகம் தான்.
என்ன, நம் தமிழகத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனா இந்த பெருமையை பெற்றுள்ளது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், நம் மாநில தலைநகரான சென்னையில் இருக்கும் மிக முக்கியமான ரயில் நிலையம் தான் நாட்டிலேயே மிக நீளமான பெயரை கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷனாக உள்ளது. ஆனால் நிறைய சென்னை வாசிகளுக்கே தெரியாது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரயில் நிலையம் இந்த பெருமையை பெற்றுள்ளது என்று. உலகின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், மிக நீளமான பெயரை கொண்டிருக்கும் ரயில் நிலையமாகவும் சென்னை சென்ட்ரல் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் ““புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்” (Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station) உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ X அக்கவுண்ட்டில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்” தான் 57 எழுத்துகள் கொண்டு இந்தியாவிலேயே மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையமாக உள்ளது என்பதை ஒரு போஸ்ட் மூலம் வெளிப்படுத்தியது. அந்த போஸ்ட் கீழே…
Did you know that Chennai Central Railway Station boasts the longest name among all Indian railway stations 🚂
#ChennaiCentral #LongestStationName #IndianRailways #TamilNadu #SouthernRailway pic.twitter.com/LM3HkpbHxu— Southern Railway (@GMSRailway) August 4, 2024
முன்பு மெட்ராஸ் சென்ட்ரல் என்றும் பின்னர் சென்னை சென்ட்ரல் என்றும் அழைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்திற்கு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் நினைவாக பெயரை மாற்ற வேண்டும் என்ற அப்போதைய தமிழக அரசின் (அதிமுக அரசின்) பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டு கடந்த 2019-ல் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரானது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்” என மாற்றப்பட்டது.
மாநில தலைநகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் சென்னையை வட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களான கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. தென்னிந்தியாவின் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகவும், நகரின் முக்கிய முனையமாகவும் இந்த ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே வேல்ஸில் உள்ள “Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwlllantysiliogogogoch” என்னும் ரயில்வே ஸ்டேஷனே உலகின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையமாக உள்ளது. இந்த பெயர் மொத்தம் 58 எழுத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் ஐரோப்பாவிலும் உலகிலும் மிக நீளமான பெயரை கொண்ட இடமாகும்.
Chennai,Tamil Nadu
December 26, 2024 7:21 PM IST
