இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் சாம் கான்ஸ்டாஸ் விளையாடினார். அறிமுகப் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் கான்ஸ்டாஸ். அவர் அறிமுகப் போட்டியில் அதிரடியாக 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கான்ஸ்டாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார்.
