Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் – முதல் நாளில் மூவர் வேட்புமனுத் தாக்கல்! | erode east by election update 10 01 2024

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2025
in அரசியல் செய்திகள்
0
சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் – முதல் நாளில் மூவர் வேட்புமனுத் தாக்கல்! | erode east by election update 10 01 2024
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்குத் தொகுதி மூன்றாவதாக தேர்தலைச் சந்திக்கவுள்ளது. 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த 2023-இல் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் அவரும் உயிரிழந்ததை அடுத்து, தற்போது மீண்டும் இடைத்தேர்தலை ஈரோடு கிழக்குத் தொகுதி சந்தித்துள்ளது.

வேட்புமனு

வேட்புமனு

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று 247-ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மதுரை விநாயகம் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நியாமான முறையில் நடைபெறவேண்டும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கூறி கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் இறுதிச் சடங்கு செய்யும் வகையில் மண் சட்டி, சேவண்டி, சங்கு, பால் ஆகியவற்றை கொண்டு வந்து சாலையில் வைத்து அபிஷேகம் செய்த பின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு

வேட்புமனு

முதல் நாள் வேட்புமனுத் தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவுற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் பேசுகையில், “முதல் நாளான இன்று மூன்று பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பொங்கல் விடுமுறை காரணமாக ஜனவரி 13 மற்றும் 17 -ஆம் தேதி வேட்புமனுக்கள் பெறப்படும்” என்றார்.



.

Previous Post

மது போதையில் அண்ணனைக் கொன்ற தம்பி கைது!

Next Post

'வேல்முருகன் VS துரைமுருகன்!' கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா? காரசார விவாதம்! குறுக்கிட்ட முதல்வர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'வேல்முருகன் VS துரைமுருகன்!' கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா? காரசார விவாதம்! குறுக்கிட்ட முதல்வர்!

'வேல்முருகன் VS துரைமுருகன்!' கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா? காரசார விவாதம்! குறுக்கிட்ட முதல்வர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In