Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தனியாளாகப் போராடியவர் பும்ரா..! முன்னாள் வீரர் புகழாரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தனியாளாகப் போராடியவர் பும்ரா..! முன்னாள் வீரர் புகழாரம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிடம் பிஜிடி தொடரில் இந்திய அணி 1-3 என மோசமாக தோல்வியுற்றது.

முதல் போட்டியிலும் மட்டுமே இந்திய அணி வென்றது. அதுவும் 295 ரன்கள் வித்தியாசத்தில் பும்ரா தலைமையில் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி போட்டியில் பும்ரா கேப்டானாக இருந்தாலும் காயம் காரணமாக அவரால் ஆடுகளத்தில் இருக்க முடியவில்லை.

இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கேப்டனாக பும்ரா குறித்து கூறியதாவது:

வழிநடத்தும் பும்ரா

பும்ராதான் அடுத்த கேப்டன். ஏனெனில் அவர்தான் அணியை முன்னின்று வழிநடத்துகிறார். பிஜிடி தொடரில் பும்ரா தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தலைமைப் பண்பிலும் அவர்மீது நேர்மறையான எண்ணத்தை பிரதிபலித்துள்ளார்.

பும்ரா மற்றவர்கள்மீது அழுத்தத்தை ஏற்படுத்துபவர் அல்ல. சில நேரங்களில் கேப்டன்கள் நம் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவர்களாக அமைந்துவிடுவார்கள். பும்ரா யாரையும் அழுத்தத்துக்கு உள்படுத்துவதில்லை. வேகப்பந்து வீச்சாளர்களிடம் நன்றாக பழகுகிறார். மிட்-ஆன், மிட்-ஆஃப் பகுதிகளில் நின்றுகொண்டு பந்துவீச்சாளர்களிடம் பேசுகிறார்.

விரைவில் அணித் தலைவர் பொறுப்பை பும்ரா ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தனியாளாகப் போராடிய பும்ரா

கம்மின்ஸ் – போலண்ட் மாதிரி ஆஸி.க்கு மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் பும்ராவுக்கு உதவ யாருமில்லை. பும்ரா இல்லாததால் ஆஸி.க்கு பேட்டிங் எளிதாக இருந்தது.

சிட்னி 4ஆவது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசியிருந்தால் சில விஷயங்கள் மாறியிருக்கலாம். தனிவீரனாக போராடினார் பும்ரா. கடைசி இன்னிங்ஸில் பும்ரா முதல் 4,5 ஓவர்கள் மட்டுமேகூட வீசியிருந்தால் போட்டி முடிந்திருக்கலாம் என்றார்.

இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

HMPV வைரஸ் சிறுநீரகத்தை பாதிக்குமா?: மருத்துவர்கள் சொல்வது என்ன?

Next Post

`இலவசங்களுக்கு நிதி இருக்கிறது; ஆனால் நீதிபதிகள் சம்பளத்துக்கு…’ – மாநில அரசுகளை சாடிய நீதிமன்றம்! Supreme Court Of India Slams State Governments: Freebies In India Over Judges’ Salaries

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`இலவசங்களுக்கு நிதி இருக்கிறது; ஆனால் நீதிபதிகள் சம்பளத்துக்கு…’ – மாநில அரசுகளை சாடிய நீதிமன்றம்! Supreme Court Of India Slams State Governments: Freebies In India Over Judges’ Salaries

`இலவசங்களுக்கு நிதி இருக்கிறது; ஆனால் நீதிபதிகள் சம்பளத்துக்கு...' - மாநில அரசுகளை சாடிய நீதிமன்றம்! Supreme Court Of India Slams State Governments: Freebies In India Over Judges' Salaries

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In