
January 08, 20258:01 AM IST
Tamil Live Breaking News: இபிஎஸ்-யின் அக்கா மகன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கம், தலைவராக பதவி வகிக்கும் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை உள்ளது. இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக எடப்பாடி பழனிச்சாமியின் அக்கா மகன் வெற்றிவேல் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
