Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்திய பொருளாதாரத்தை மீட்ட மாமேதை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2025
in அரசியல் செய்திகள்
0
Manmohan Singh : மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு ஏன் இன்று நடைபெறவில்லை..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:December 27, 2024 11:45 AM IST

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரவு 9.50 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மறைவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (26ம் தேதி) அனுமதிக்கப்பட்டார். 92 வயதான சிங், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரவு 9.50 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக இரு முறை பணியாற்றிய டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர்.

2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவர் தான் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர்.

இந்தியாவில் அதிக வருடங்கள் பிரதமராகப் பதவி வகித்தவரில், நான்காவது இடத்தைப் பிடித்தவர். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

செப்டம்பர் 26, 1932 இல், மேற்கு பஞ்சாபில் உள்ள காஹ் கிராமத்தில் பிறந்தவர் மன்மோகன் சிங். தற்போது காஹ் கிராமம் பாகிஸ்தானில் உள்ளது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

1971 இல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகத் தொடங்கிய மன்மோகன் சிங், 1972 இல், நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில் அவர், 1976 வரை இருந்தார்.

இதையும் படிங்க : ‘இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் உயிர் பிரிந்தது’ – மெடிக்கல் ரிப்போர்ட் வெளியிட்டது எய்ம்ஸ் மருத்துவமனை…

பிறகு 1976 மற்றும் 1980 க்கு இடையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI), தொழில்துறை மேம்பாட்டு வங்கியின் இயக்குநர், மணிலாவில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர்கள் குழுவில் இந்தியாவிற்கான மாற்று ஆளுநர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட பல முக்கியப் பாத்திரங்களில் சிங் பணியாற்றினார்.

இரு முறை பிரதமர், பல்வேறு துறையில் உயர் பதவி என எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும், 1991ல் இவர் நிதி அமைச்சராக இருந்ததே காலம் பெரிதும் பேசப்படும். 1990ல் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களே அதிகம் கவனிக்கப்பட்டுவருகிறது.

First Published :

December 26, 2024 10:37 PM IST



.

Previous Post

IT RAID; டெல்லி Twist – அண்ணாமலை, எடப்பாடி இருவருக்கும் செக் வைக்கும் BJP தலைமை? | Imperfect Show

Next Post

உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று – முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று – முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று - முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In