குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகள்
இந்த நிலையில்தான், போராட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அரசு தரப்பு முயன்றுவருவது ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனால், வன்முறையைத் தவிர்க்க நவம்பர் 26-ம் தேதி குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளுடன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போதுவரை பெரிதும் கவனம் பெறாமல் இருந்த இந்தப் போராட்டம், இந்த உண்ணாவிரதம் தொடங்கியதும் வெகுமக்களால் கவனம் பெறத் தொடங்கியது.
ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டம், விவசாயிகளின் இயக்கத்தில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது. ரயில் மறியல் செய்ய முயன்றும் ஜக்ஜித் சிங் தல்லேவால் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். சில பகுதிகளில் ஜக்ஜித் சிங் தல்லேவால் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்கள், ஒவ்வொருநாளும், ஹரியானா – பஞ்சாபிலிருந்து ஜக்ஜித் சிங் தல்லேவால் இருக்கும் கானெளரி பகுதிக்கு வந்துக்கொண்டே இருக்கின்றனர். விவசாயிகளின் வாகனங்கள் மட்டும் 5 – 6 கி,மீ தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் இளைஞர் ஒருவர், ‘விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்போது, இளைஞர்களாகிய எங்களால் ஏன் ஏதாவது செய்ய முடியாது?” எனப் பேசியிருக்கிறார். இப்போது ‘கிசான் அந்தோலன் 2.0’ வின் அடையாளமாக, தலைவராக ஜக்ஜித் சிங் தல்லேவால் உருவாகியிருக்கிறார்.
