Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 7, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவது என எங்களுக்குத் தெரியும் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்தியாவை வீழ்த்தி பார்டர் – கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள உள்ளன.

இதையும் படிக்க: உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்; பயிற்சியாளர் கருத்து!

ககிசோ ரபாடா கூறியதென்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவது என எங்களுக்குத் தெரியும் என ககிசோ ரபாடா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற மிகப் பெரிய வாய்ப்பு கண் முன் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது எப்போதும் கடுமையாக இருக்கும். ஏனெனில், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக விளையாடுபவர்கள்.

இதையும் படிக்க: ரஷித் கான் அபார பந்துவீச்சு; டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!

நாங்கள் மிகவும் சவாலான அணியாக இருப்போம். ஆஸ்திரேலிய அணியும் எங்களுக்கு எதிராக மிகுந்த சவாலளிப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். ஆனால், ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 16 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

2024 இல் மட்டும் ரூ.1365 கோடி உண்டி காணிக்கை – 2.55 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம்! | Tirumala Tirupati hundi offerings worth Rs.1365 crore in 2024 – how many devotees have visited Tirupati temple

Next Post

Madurai Rally: மதுரையை கதறவிட்ட டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி! திக்கி திகைக்கும் போலீஸ்! தன் எழுச்சியாக கூடிய மக்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Madurai Rally: மதுரையை கதறவிட்ட டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி! திக்கி திகைக்கும் போலீஸ்! தன் எழுச்சியாக கூடிய மக்கள்!

Madurai Rally: மதுரையை கதறவிட்ட டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி! திக்கி திகைக்கும் போலீஸ்! தன் எழுச்சியாக கூடிய மக்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In