ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) மற்றும் பிற சுவாச நோய்களின் சாத்தியமான பரவலுக்கு சுகாதார அமைப்பின் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, டெல்லி அரசு ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கர்நாடகத்தில் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு ஸ்டேட்மென்ட் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் பரவுவது குறித்த கவலைகளைத் தணிக்கும் வகையில் அமைச்சகம், HMPV ஒரு புதிய வைரஸ் அல்ல என்றும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது என்றும் கூறியது.
