ஆட்டு மந்தைகள் போல் குஷ்பு அடைப்பு
திமுக கூட்டணியில் பயணிப்பவர்கள் மக்கள் எதிர்ப்பு அலையை சந்திக்க வேண்டி இருக்கும். மாலுமி எவ்வளவு திறமையாக இருந்தாலும் கரை சேர்க்க முடியாது. இங்கு அந்த மாலுமிக்கு திறமையும் இல்லை. நேற்று கூட குஷ்புவை பிடித்து போட்டுட்டாங்க. ஆட்டு மந்தையில் சென்று ஆடுகளை அடைப்பது போல் பாஜக மகளிரணியை ஆட்டு மந்தைகளாக நினைத்து அடைத்து உள்ளனர். ஒரு பக்கம் குஷ்புவை கைது செய்துவிட்டு, டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணன் வைகோவை சுதந்திரமாக பேச விடுகின்றனர். ஆனால் இது மத்திய அரசு விவகாரம் இல்லை. மாநில அரசு விவகாரம். மக்கள் போராட்டம் வந்த பின்னர்தான் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சரே அறிக்கைவிட்டார். அவை முன்னவர், மூத்த அமைச்சர் துரைமுருகன் இரவோடு, இரவாக டெல்லி சென்று உள்ளார். டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக பேச டெல்லி சென்றுள்ளார் என்று நினைக்கிறேன் என கூறினார்.
