சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் விராட் கோலி அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
பார்டர் – கவாஸ்கர் தொடரில் விராட் கோலி தான் விளையாடிய அனைத்து இன்னிங்ஸ்களிலும் அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக 5 இன்னிங்ஸில் 4 முறை ஸ்காட் போலண்ட் ஓவரில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்த பிறகு மிகவும் கோபமாக கத்திக்கொண்டு வெளியேறினார்.
தற்போது இந்திய அணி 17 ஓவர் முடிவில் 85/4 ரன்கள் எடுத்துள்ளது.
