மகாராஷ்டிர மாநிலத்தின் தானே சிறையில் செல்போனை பதுக்கி வைத்திருந்த விசாரணைக் கைதி ஒருவர் பிடிப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தானேவிலுள்ள மத்திய சிறையில் சுமார் 200 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும், புதிய 3 வது வளாகத்தில் கடந்த டிச.30 அன்று சிறை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, கடந்த 2023 ஆம் ஆண்டு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் பரஸ்மல் சேத்தியா (வயது-38) என்பவரது ஒரு செருப்பு மட்டும் காணவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறை அறையில் காவலர்கள் தேடியப்போது அவரது மற்றொரு செருப்பு கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ‘ஓராண்டு போதும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’ – ஒமர் அப்துல்லா
