Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை… முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!’ – மருத்துவர் ராமதாஸ் | Doctor Ramadoss announced that Mugunthan is the youth wing leader in PMK party

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 2, 2025
in அரசியல் செய்திகள்
0
பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை… முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!’ – மருத்துவர் ராமதாஸ் | Doctor Ramadoss announced that Mugunthan is the youth wing leader in PMK party
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதையடுத்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் விளைவாக, கடந்த 2024 டிசம்பர் 29-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி. அதன்பிறகு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “கட்சியின் வளர்ச்சி, தேர்தல் திட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து மருத்துவர் ஐயாவிடம் விவாதித்தோம். பொதுக்குழுவில் நேற்று நடந்தது எங்கள் கட்சியின் உட்கட்சிப் பிரச்னை. எங்கள் கட்சிப் பிரச்னை குறித்து நாங்கள் பேசிக் கொள்கிறோம். பா.ம.க ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், அதில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அது குறித்து யாரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அன்புமணி, முகுந்தன்

அன்புமணி, முகுந்தன்

அதையடுத்து பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “எங்களுக்கு எல்லாமே, எப்போதுமே ஐயா ஐயாதான்” என்று கூறினாரே தவிர, பொதுக்குழுவில் நடந்தது குறித்தோ, முகுந்தனின் நியமனம் குறித்தோ எதையும் பேசவில்லை. அதனால் முகுந்தனின் நியமனம் நீடிக்குமா, அல்லது அதில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்குள் குழப்பம் நீடித்தது. பனையூரில் இருக்கும் தனி அலுவலகம் வந்து என்னை சந்திக்கலாம் என்று அன்புமணி அறிவித்ததால், எந்தப் பக்கம் செல்வது என்று தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்த சூழலில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “பா.ம.க பொதுக்குழுவில் நடைபெற்றது எங்கள் உள்கட்சி விவகாரம். பா.ம.க இளைஞரணி தலைவர் முகுந்தன்தான். அதை பொதுக்குழுவில் அறிவித்ததுடன், அதற்கான கடிதத்தையும் அவரிடம் வழங்கி விட்டேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அன்புமணியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரிடம் பேசி அது சரி செய்யப்பட்டு விட்டது” என்று கூறியிருக்கிறார்.



.

Previous Post

‘ஆண்ட பரம்பரை.. இந்த சமுதாயம் தான்.. நம் வரலாறு பின்தங்கப்பட்டது..’ அமைச்சர் மூர்த்தி பேசியது என்ன?

Next Post

நேசிப்பாயா வெளியீட்டுத் தேதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நேசிப்பாயா வெளியீட்டுத் தேதி!

நேசிப்பாயா வெளியீட்டுத் தேதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In