பொருளாதார மேதை மன்மோகன் சிங்
தனது அரசியல் வாழ்க்கையில், 1999 ஆம் ஆண்டில் ஒரே ஒரு முறை தெற்கு டெல்லி தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932 அன்று பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். டாக்டர் சிங் 1948 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் முடித்தார். இதற்குப் பிறகு, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பைப் பெற்றார். 1957 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பெற்றார். இவருக்கு குர்சரண் கவுர் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
