புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த ‘செயில்’ (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்), பணிபுரிய சிறந்த இடம் என்ற சான்றிதழைப் பெற்றுள்ளது.
செயில் ஜனவரி 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான மதிப்புமிக்க ‘பணிபுரிய சிறந்த இடம்’ என்ற சான்றிதழை, கிரேட் பிளேஸ் டு ஒர்க் இன்ஸ்டிடியூட் வழங்கியது என்று எஃகு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் நேரடி கருத்துகளின் அடிப்படையில், பணிபுரிய சிறந்த இடம் ‘செயில்’ என்ற சான்றிதழைப் இரண்டாவது முறையாக பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
