அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலம் வாழ்ந்த ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் ஜார்ஜியாவின் பிளைன்ஸ் நகரில் காலமானார். “என் தந்தை ஒரு ஹீரோ, எனக்கு மட்டுமல்ல, அமைதி, மனித உரிமைகள் மற்றும் சுயநலமற்ற அன்பை நம்பும் அனைவருக்கும் ஒரு ஹீரோ” என்று அவரது மகன் சிப் கார்ட்டர் கூறினார். “இந்த பொதுவான நம்பிக்கைகள் மூலம் நானும் என் சகோதரர்களும் சகோதரியும் அவரை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொண்டோம். அவர் மக்களை ஒன்றிணைத்த விதத்தின் காரணமாக உலகம் எங்கள் குடும்பம், மேலும் இந்த பகிரப்பட்ட நம்பிக்கைகளைத் தொடர்ந்து வாழ்வதன் மூலம் அவரது நினைவை கௌரவித்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று குறிப்பிட்டனர். மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
