Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

JPC: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – பிரியங்கா காந்தி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வேலை என்ன? | How does one nation one election Joint Parliamentary Committee works

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 20, 2024
in அரசியல் செய்திகள்
0
JPC: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – பிரியங்கா காந்தி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வேலை என்ன? | How does one nation one election Joint Parliamentary Committee works
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதும், அதற்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 196 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

மேலும், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேவும் அதற்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் வெடித்து வருகின்றன.

அதனால், இந்த திட்டம் குறித்து முடிவெடுக்கக் கூட்டு நாடாளுமன்றக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் இடம்பெற உள்ளனர்.

ஒரே நாடு...ஒரே நேரத்தில் தேர்தல்

ஒரே நாடு…ஒரே நேரத்தில் தேர்தல்

இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 18) அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி இரண்டு நாளாக இரு அவையிலும் அமளி ஏற்பட்டது. அதனால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று (டிசம்பர் 20) மக்களவை கூட்டத்தொடர் அமளியில் தொடங்கியிருந்தாலும், அவையை ஒத்தி வைப்பதற்கு முன்பு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த குழுவில் பிரியங்கா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்தக் குழுவின் செயல்பாடு என்ன என்பதைப் பார்ப்போம்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு

பொதுவாகவே, நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது குறிப்பிட்ட விஷயங்களில் அல்லது மசோதாவில் எதாவது எதிர்ப்போ, சந்தேகமோ எழுந்தால்தான் அமைக்கப்படும். இந்த குழுவில் இரண்டு அவை உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள்.

இந்தக் குழு அரசின் எந்தத் தூண்டுதல்களும் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு அறிக்கையைத் தயார் செய்யும்.

இந்தக் குழு அறிக்கையைத் தயார் செய்து சமர்ப்பித்த பின்னர், இந்தக் குழு கலைக்கப்படும். ஆனால், இந்தக் குழு தரும் அறிக்கை தான் இறுதியானது என்பதில்லை. அரசு வேண்டுமென்றால் கூடுதல் விசாரணைக்குக் கூட செல்லலாம்.



.

Previous Post

Savukku Shankar : ‘ஜாமின் இல்லை.. மீண்டும் சிறை..’ சவுக்கு சங்கர் கோரிக்கை ஒத்திவைப்பு.. டிச.24 வரை மதுரை சிறை!

Next Post

அவுட்டான விரக்தியில் ஸ்டெம்பை உதைத்த கிளாசன்! 15% அபராதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவுட்டான விரக்தியில் ஸ்டெம்பை உதைத்த கிளாசன்! 15% அபராதம்!

அவுட்டான விரக்தியில் ஸ்டெம்பை உதைத்த கிளாசன்! 15% அபராதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In