Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Ambedkar : அமித் ஷா சர்ச்சைப் பேச்சு; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் – பதறுகிறதா பாஜக? | Is Ambedkar Issue a big problem for bjp?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 20, 2024
in அரசியல் செய்திகள்
0
Ambedkar : அமித் ஷா சர்ச்சைப் பேச்சு; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் – பதறுகிறதா பாஜக? | Is Ambedkar Issue a big problem for bjp?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விளக்கமளித்த அமித் ஷா

இதுவரை நாடாளுமன்றத்திலோ, பொதுவெளியிலோ தாங்கள் பேசிய கருத்துகள் சர்ச்சையாகும் பட்சத்திலோ, தங்களுக்கு எதிராக வரும் பெரும் குற்றச்சாட்டுகள் குறித்தோ பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அதற்கு வருத்தமோ, விளக்கமோ தெரிவித்ததில்லை. ஆனால் இம்முறை, சர்ச்சையைக் கிளப்பிய அமித் ஷாவுக்கு முன்பாக பதறியடித்துக் கொண்டு விளக்கமளித்திருந்தார் பிரதமர் மோடி.

“டாக்டர் அம்பேத்கரை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். நாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்தான் காரணம். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றக் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க பணியாற்றி வருகிறது. ஆனால், அம்பேத்கரைக் காங்கிரஸ் கட்சி அவமதித்ததை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதை மறைக்கவே காங்கிரஸ் தற்போது முயற்சி செய்கிறது. அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ்தான். அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்காததும் காங்கிரஸ் அரசுதான்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அமித் ஷாவோ, “காங்கிரஸ் உண்மையைத் திரித்து வெளியிட்டுவருவதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். அம்பேத்கரை எதிர்த்து வந்தது காங்கிரஸ் கட்சிதான். தேர்தல் சமயத்தில் எனது கருத்தை ஏ.ஐ. மூலம் திரித்து வெளியிட்டனர். இன்று நான் பேசியதன் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு திரித்து வெளியிடுகின்றனர். கார்கே என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார். அதுதான் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால் நான் ராஜினாமா செய்யக்கூடத் தயார். ஆனால், அது அவரின் பிரச்னைகளைத் தீர்க்காது” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குழப்பத்தில் கூட்டணிக் கட்சிகள்?

அமித் ஷாவின் சர்ச்சைக் கருத்து விவகாரத்தில் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்த அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு தலைவர் மட்டுமல்ல… அவர் நமது நாட்டின் ஆன்மா. அம்பேத்கரை வணங்குபவர்களால் இனி பாஜகவை ஆதரிக்க முடியாது. பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? பா.ஜ.க-வின் இந்த அவமதிப்புக்குப் பிறகு, நீங்கள் ஆழமாகச் சிந்திப்பீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், “அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்றாலும், சில அரசியல் கட்சிகள், அவரை முன்னிறுத்தி தலித் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய முயல்கின்றன. அந்த வகையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தலித் மக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அங்கு, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் வசமிருக்கும் தலித் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப, குழுக்கள் அமைத்து தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறது பா.ஜ.க. அரசியல் சாசன தினமான நவம்பர் 26-ம் தேதி இரவு முழுவதும் டெல்லியில் தலித் மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் தங்கியிருந்து, அந்த மக்களுடன் உணவருந்தி, அவர்களின் குறைகளைக் கேட்டிருக்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்

வேறு சில மாநிலங்களிலும் காங்கிரஸ் வசமிருந்த தலித் மக்களின் வாக்குகளில் கணிசமான அளவு பா.ஜ.க பக்கம் திரும்பியிருக்கின்றன. பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன் சக்தி (ராம்விலாஸ்), இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே) ஆகிய கட்சிகளுக்கும் கணிசமான தலித் வாக்கு வங்கி இருக்கிறது. அமித் ஷாவின் இந்தச் சர்ச்சைக் கருத்து, அம்பேத்கரின் பற்றாளர்களிடம் பெரும் கோபத்தை உண்டாக்கியிருப்பதால், என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பதற்றம் பா.ஜ.க-விடம் தென்படுகிறது. அதனால்தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும் உடனடியாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இது தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.” என்கிறார்கள்.



.

Previous Post

LIVE: வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம்

Next Post

Blankets in Trains: இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளி போர்வைகள் துவைக்கப்படும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Blankets in Trains: இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளி போர்வைகள் துவைக்கப்படும்

Blankets in Trains: இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளி போர்வைகள் துவைக்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In