Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘புஷ்பா 2’ நெரிசலில் சிக்கிய 8 வயது சிறுவன் மூளைச்சாவு.. தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2024
in அரசியல் செய்திகள்
0
‘புஷ்பா 2’ நெரிசலில் சிக்கிய 8 வயது சிறுவன் மூளைச்சாவு.. தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்! – News18 தமிழ்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரைப்பட முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனுக்கு வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் (இம்மாதம் 4ம் தேதி) திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.

விளம்பரம்

இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

Also Read | சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – ரவிசந்திரன் அஸ்வின் அறிவிப்பு

மேலும், அச்சிறுவனுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வருவதாகவும், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது ஆகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விளம்பரம்

இந்த நிலையில் அச்சிறுவன் மூளைச்சாவு அடைந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த 14 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில் தற்போது மகனும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.



.

Previous Post

‘தமிழகத்தில் RSS ஆட்சி நடக்குது.. எடப்பாடி சொன்னது சரி தான்.. ஸ்டாலினிடம் சிஸ்டம் இல்லை’ தவாக தலைவர் வேல்முருகன்!

Next Post

அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்!

அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In