கடந்த வாரம், ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது விசிக.
இந்த நிலையில் நேற்று, கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். இதுக்குறித்து, நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஆதவ் அர்ஜுனா நல்ல நோக்கத்தில் தான் கட்சியில் வந்து இணைந்தார். எனக்கு எத்தனையோ கட்சியில் தொடர்பு இருந்தாலும், திமுகவில் கூட என்னால் இணைந்து செயல்பட்டிருக்க முடியும். ஆனாலும், தலித் மக்களின் நலனுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி தான் விசிக-வில் சேர்ந்தார்.


தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “என்னுடைய நியாயமான கோபங்கள், மக்கள் நலனுக்காக நான் வெளியிடும் கருத்துகள் எனக்கும், திருமாவுக்கும் இடையில் இருக்கும் உறவை பாதிப்பதாக இருக்கிறது. அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால், விலகுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
