Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 15, 2024
in அரசியல் செய்திகள்
0
திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, நகராட்சி சார்பில் பெண்களின் நலன் கருதி `கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்’ புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவறை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டும், மாதக்கணக்கில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே கிடக்கிறது. திருப்பத்தூருக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் பக்கத்து மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கழிவறை திறக்க தாமதம் ஏறப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வேலை பார்த்துக் கொண்டு வரும் பெண்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு எதிரே உள்ள கட்டணக் கழிவறைக்கு ரூ.10 செலுத்திச் செல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்’

இது குறித்து அங்குப் பயணம் மேற்கொண்டு வரும் பெண் ஒருவர் கூறுகையில், “நான் பூ வியாபாரம் செய்து கொண்டு வருகிறேன். தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து மார்க்கெட்டில் பூ வாங்கிக் கொண்டு ஊருக்குச் செல்வேன். அப்போது அவசரத்துக்குக்கூட கழிவறைக்குச் செல்ல முடியாமல் பலமுறை சிரமப்பட்டிருக்கிறேன். சில நேரங்களில் கையில் அதிகம் பணம் இருக்காது. ஊருக்குப் போவதற்குத் தேவையான தொகைதான் வச்சிட்டிருப்பேன். அப்போதெல்லாம் கட்டணக் கழிவறைக்குக் காசு கொடுத்துத்தான் போவேன்.

கட்டணமில்லா சிறுநீர் கழிப்பிடம்’

அரசாங்கம் ஏழை எளிய மக்கள் பயன்படணும்னு தான் கட்டணமில்லா கழிவறை அமைச்சிருக்காங்க. அதனால அதைப் பயன்பாட்டுக்கு திறந்து வெச்சா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார்.

இது குறித்துத் திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “கான்ட்ரக்டர் இன்னும் எங்களிடம் சாவி ஒப்படைக்கவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாகக் கட்டப்பட்டுள்ள இலவச பெண்கள் கழிவறையைத் திறக்க விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர்.

மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு!



.

Previous Post

சொல்லப் போனால்… ஒரு அயோத்தி போதாதா?

Next Post

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In