Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

EVKS Elangovan: ‘உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்…’ – நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ|Kushboo shares her memories with EVKS Elangovan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 15, 2024
in அரசியல் செய்திகள்
0
EVKS Elangovan: ‘உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்…’ – நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ|Kushboo shares her memories with EVKS Elangovan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு, நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பூ பேசியதாவது,

“ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நல்ல தலைவர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அவருக்கு ஈகோ கிடையாது. எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். உலகமே தலைகீழாக நின்றாலும், கட்சிக்காக நான் பாடுபடுவேன் என்று கூறுவார். அப்படி ஒரு விசுவாசி அவர். நான் என் அண்ணனை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா, என் நண்பரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா அல்லது என்னுடைய குடும்பத்தின் மூத்தவரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா என்பது எனக்கு தெரியவில்லை.

உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்...

உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்…

“அவர் எப்போதும் உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம் உள்ளது. அது என்ன என்று சொல்ல தெரியவில்லை’ என்று கூறுவார். எனக்கும் இன்று அப்படி தோன்றுகிறது. அவர் எப்போதும் நிச்சயமாக என் மனதில் இருப்பார். கட்சி ரீதியாக மட்டுமில்லாமல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரு நண்பரை இழந்துள்ளதாக உணர்கிறார்கள்.

அவர் மாதிரி இன்னொரு ஆள் வரமுடியாது. என்னுடைய அரசியல் பயணம், அவர் இருக்கும்போது தான் தொடங்கியது. அவர் தான் என்னை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தார். நான் காங்கிரஸ் விட்டு நீக்கியப்போதும் கூட, அவரிடன் அதே அன்பு, அதே மரியாதை, அதே பாசம் தொடர்ந்தது.

இன்று இந்த இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பு. இதில் இருந்து எப்படி மீண்டு வருவேன் என்று தெரியவில்லை. அவருடன் பழகியவர்களுக்கு தான் அவருடைய மதிப்பு தெரியும். அவரது தைரியம், உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பது, மனதில் பட்டதை பேசுவது போன்ற தைரியம் வேறு எந்த தலைவருக்கும் வராது” என்று பேசினார்.



.

Previous Post

மகனுக்கு 1 ஆம் வகுப்பு பள்ளிக் கட்டணம் இத்தனை லட்சமா..? தந்தை போட்ட ஒரே போஸ்ட்.. நெட்டிசன்கள் ரியாக்ஷன்!

Next Post

காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது…? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்… – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது…? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்… – News18 தமிழ்

காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படுகிறது...? ரயில்வே துறை இணை அமைச்சர் ரவிநாத் சிங் விளக்கம்... – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In