Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`உயிர் உள்ள வரையில்' – வைக்கம் பெரியார் நினைவகத்தில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலினின் படம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 13, 2024
in அரசியல் செய்திகள்
0
`உயிர் உள்ள வரையில்' – வைக்கம் பெரியார் நினைவகத்தில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலினின் படம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரளாவில், வைக்கம் மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தினரும் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி 1924-ல் போராட்டம் நடைபெற்றது.

இதில், பெரியார் கலந்துகொண்ட பிறகு வலிமையடைந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக இறுதியில் திருவாங்கூர் சமஸ்தான அரசு, போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு சம்மதித்தது.

பெரியார்

இந்த வெற்றியின் நினைவாக, அங்கே பெரியார் நினைவகமும், நூலகமும் பின்னாளில் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இவ்வாறிருக்க, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் புனரமைக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சார்பில் ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டது.

வைக்கம் போராட்டம் முழு வரலாறு இதோ!

இந்த நிலையில், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், தி.க தலைவர் கி. வீரமணி, வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

வைக்கம் பெரியார் நினைவகம்

பெரியார் நினைவகத்தில் அவர் தொடர்பான புத்தகங்கள், அவரின் வாசகம் இடம்பெற்ற புகைப்படங்கள், அறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல இடம்பெற்றிருக்கின்றன. அவற்றோடு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.

பெரியார் நினைவகம்

`நான், திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்.’ என்ற வாசகம் அடங்கிய பெரியார் படத்துக்கு கீழே, `ஒரு மனிதன் உயிர் வாழ்ந்திருப்பதினால் உயிர் உள்ள வரையில் காரியம் செய்ய வேண்டியது கடமை என்பதற்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கக்காரர்களின் வாழ்வின் லட்சியம்.’ என்ற வாசகம் அடங்கிய உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

வைக்கம் நூற்றாண்டு விழா: புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம், நூலகம் – Exclusive Album

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal



.

Previous Post

ஒரு லிட்டர் ரசாயனம் கலந்த 500 லிட்டர் பால்.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!

Next Post

நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In