Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற 14வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58வது நகர்த்தலில் குகேஷ் வீழ்த்தினார்.

இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ், இதுவரை அந்தப் பெருமை பெற்றிருந்தார். இவர் 22 வயதில் சாம்பியனானார். ஆனால், குகேஷ் இந்த சாதனையை 18 வயதில் முறியடித்துள்ளார்.

கடைசி நேரத்தில் மாறிய ஆட்டம்

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 13 சுற்றுகளில் குகேஷ் – டிங் லிரென் ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 14வது சுற்று இன்று (டிச. 12) தொடங்கியது. இந்தச் சுற்றும் சமநிலையில் முடியும் என்ற நிலையிலேயே இருவரின் ஆட்டமும் நீடித்துவந்தது.

எனினும் போட்டி முடிவதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பு லிரென் செய்த சிறிய தவறு, குகேஷுக்கு சாதகமாக அமைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட குகேஷ் 58வது நகர்த்தலில் ஆட்டத்தை முடித்து ஒரு புள்ளியைப் பெற்றார். குகேஷ் 7.5, டிங் லிரென் 6.5; இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.

குகேஷ் பேட்டி

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற பிறகு குகேஷ் பேசியதாவது,

”ஒவ்வொரு செஸ் வீரருக்கும் இருக்கும் கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகால தீவிர பயிற்சிக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. போட்டிக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இந்த நாளுக்காக 10 ஆண்டுகாலமாக உழைத்தேன். தற்போது இளம் செஸ் வீரனின் கனவு நனவாகியுள்ளது.

டிங் லிரென் தோல்விக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து உலக செஸ் சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை உரித்தாக்குகிறேன் ” எனக் குறிப்பிட்டார்.



.

Previous Post

சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் – ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In