
லக்கி பாஸ்கர் சினிமா கதாநாயகன் போல் பணம், வீடு, கார் ஆகியவற்றை சம்பாதித்து திரும்புகிறோம் என்று நண்பர்களிடம் கூறி ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியும் செயல்பட்டுவருகிறது. அந்தத் தங்கும் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி பள்ளியில் படித்துவருகின்றனர்.
அந்த மாணவர் விடுதியில் இருந்து கடந்த 9ம் தேதி, 9ம் வகுப்பு படிக்கும் கிரண் குமார், கார்த்திக், சரண் தேஜ், ரகு ஆகிய நான்கு மாணவர்கள் திடீரென மாயமாகியுள்ளனர். இந்த விஷயம் அறிந்ததும் மாணவர் விடுதி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து உடனடியாக அந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். அதேபோல், காணாமல் போன மாணவர்களின் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து மாணவர் விடுதிக்கு விரைந்த காவல்துறையினர் விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். அதில், நான்கு மாணவர்களும் பள்ளி மாணவர் விடுதியின் நுழைவுவாயில் கதவை ஏறி குதித்து வெளியே சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக மாணவர்களின் புகைப்படங்களைக் கொண்டு, ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடியும், அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.
BREAKING – Four 9th-grade students from St. Ann’s High School, Visakhapatnam, escaped their hostel after watching @dulQuer‘s #LuckyBaskhar, they told their friends they would return after earning money to buy cars and houses, inspired by #DulquerSalmaan‘s character in the film pic.twitter.com/X4iUa6bjc9
— Daily Culture (@DailyCultureYT) December 10, 2024
மாணவர்கள் விடுதியில் இருந்து காணாமல்போனது தொடர்பாக விடுதியில் இருந்த சக மாணவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், மாணவர்கள் நான்கு பேரும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளனர். அதில் துல்கர் சல்மான் கார், வீடு, பணம் உள்ளிட்டவற்றை எளிய வழியில் சம்பாதித்து ஆடம்பரமாய் வாழ்வதைப் போல தாங்களும் சம்பாதித்துவிட்டு திரும்புவோம் என மாணவர்களிடம் தெரிவித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
.
