திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணாமலை வணிக வளாகங்கள் உள்ளது . இங்கு மொத்தம் 80க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் நெட் சென்டர், போட்டோ ஸ்டுடியோ, துணிக்கடை, உணவகங்கள், தொலைபேசி கடை, தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடை போன்ற பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகம் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய கட்டடம் என்பதால் மிகவும் சேதமடைந்து எவ்வித பராமரிப்பின்றி கிடக்கிறது.
கடைக்காரர்களின் குமுறல்:
இதைப் பற்றி அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்காரர்களிடம் விசாரித்த போது, “ஆமாம் சார் இந்த இடம் பல வருடங்களாகவே இப்படி தான் உள்ளது. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
